காங்கிரஸை தோற்கடியுங்கள்!!-சீமான்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது.
இதில் சீமான் கலந்து கொண்டு பேசியது:
நாம் யாரை வெற்றி பெற வைக்கிறோம் என்பதை விட, இன்றைய சூழலில் யாரை தோற்கடிக்கச் செய்யப் போகிறோம் என்பதே மிக மிக முக்கியம்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இறக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. படை, ஆயுதம், அரசியல் ஆதரவு என எல்லாவற்றையும் பிரயோகித்து தமிழர்களைக் கொன்ரது காங்கிரஸ்.
தமிழ்நாட்டுத் தமிழன் செத்தால் கூட கண்டுகொள்ளாத, அப்போதும் இலங்கையை ஆதரிக்கிற ஒரே கட்சி காங்கிரஸ். பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் இறந்தால் இந்தியன் இறந்து விட்டார் என கூறுகிறார்கள். தமிழன் இறந்துவிட்டதாக யாரும் கூறவில்லை.
காங்கிரஸ் கட்சி காமன் வெல்த் ஊழல், பீரங்கி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் சிக்கி திணறுகிறது.
காங்கிரஸ் கட்சிதான் நமக்கு முதல் எதிரி. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என மக்களிடத்தில் தெளிவாக பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியை தேர்லில் தோற்கடித்து விட்டு இதே இடத்தில் மீண்டும் வெற்றி கூட்டங்கள் நடத்துங்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் முடியும் தருவாயில் குடிசை வீடுகளை மாற்றி காங்கிரட் வீடுகள் கட்டி தருவதாக கூறுகிறார். இந்த திட்டத்தை முன்பே செய்திருக்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் தற்சமயம் அறிவிக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் தெருவில் நூலகங்கள் இல்லை. ஆனால் தெருக்கள் தோறும் பிராந்தி கடைகள் (டாஸ்மாக்) உருவாகியுள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் 60 அடி ஆழத்திற்கு பொக்லைன் கொண்டு மணல் அள்ளுகிறார்கள்.
இவ்வாறு மணல் அள்ளுவதால் குடிநீர் திட்டமும் அடியோடு பாதிக்கிறது. மேலும் விவசாய விளை நிலங்களின் உற்பத்தியும் பாதிக்கிறது. இந்தியாவில் ஒரு லட்ச விவசாயிகள் பட்டினியால் இறக்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் உணவு கிடங்கில் உணவு பொருட் கள் மக்கி மக்களுக்கு பயன் படவில்லை...", என்றார்.












Click it and Unblock the Notifications