வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டமில்லை - தமிழக அரசு
சென்னை: சென்னையில் வழங்கப்படுவது போல வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது நடைபெற்ற விவாதத்தில், சென்னையில் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ததுபோல, கிராம பகுதிகளிலும் நடமாடும் வேன் மூலம் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார் கே.பி.ராமசாமி (தி.மு.க.).
இதற்கு பதிலளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 10 ஆண்டு காலமாக நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் மலை பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. கோவை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் இந்த திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. மலைப்பகுதியில் தனியாக ரேஷன் கடைகள் அமைப்பதற்கு இடம் கிடைக்காது.
எனவே அந்த பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம்தானே தவிர, வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் அல்ல. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் 1,400 குடும்ப அட்டைகளை பிரித்து 800 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை.
வீடு,வீடாக...
குறிப்பாக கோடம்பாக்கம் போன்ற பகுதியில் இடம் கிடைக்கவில்லை. இடம் கிடைக்காத காரணத்தால் கூட்டுறவு நிர்வாகத்தின் மூலமாக சென்னை கோடம்பாக்கத்தில் பரீட்சார்த்த முறையில் முதல் முறையாக நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. பத்திரிகையில் ரேஷன் பொருட்கள் வீடு, வீடாக கொடுக்கும் திட்டம் இருப்பதாக ஒரு செய்தி வந்தது தவறாகும். வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் எதுவும் இப்போது இல்லை, என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications