கூட்டணி பேச்சுவார்த்தை: கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவிக்க கூடாது-தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில கட்சி நிர்வாகிகளுடன் வரும் 13ம் தேதி முதல் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, 10 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாமக்கல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவை சோனியா காந்து அமைத்துள்ளார்.

இந்தக் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தின் இல்லத்தில் நடந்தது. இதில் குழுவில் இடம் பெற்றுள்ள 5 பேரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

அதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு மாவட்ட வாரியாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் மற்றும் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தும் என்றார்.

கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவிக்க கூடாது:

இந் நிலையில் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் உகந்த எந்தவொரு அமைப்பையும், குழுவையும் நியமித்து அறிவிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தோழமைக் கட்சிகளோடு பேசுவதற்கும், காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பன விபரங்களை எடுத்துக் கூறி அவற்றை பெறுவதற்கும் சோனியா காந்தி ஐவர் குழுவை அமைத்துள்ளார்.

அக்குழுவின் முதற் கட்டப் பணியாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தோடு கலந்தாய்வு நடத்தியது. சோனியா காந்தி வகுத்தளித்த வழிமுறைகளின்படி உரிய செயல்திட்டத்தை நிறைவேற்றிட அப்போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை இன்னாள்-முன்னாள் உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், மாநில, மாவட்ட அளவிலான நிலையில் காங்கிரசில் பணியாற்றும் நிர்வாகிகள் என அனைவரையும் வருகிற 13ம் தேதி முதல் ஐவர் குழு சந்தித்து அவர் களது கருத்துரைகளை கேட்டறிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் தொடர்ந்து பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும். சம்மந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மூலம் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அக்கருத்துரை கேட்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துத்துரைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி வகுத்தளித்த நெறிமுறைப்படி நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் நிறைவாக நடைபெற உரிய பங்கேற்பை அளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் சகோதர, சகோதரியின் கடமையும், பொறுப்புமாகும். அதன்படி தேர்தல் பணிக்கான ஐவர் ஆய்வுக்குழுவின் நிகழ்ச்சிகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மேலும் காங்கிரசின் இந்த நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த ஒரு நிலையையும் யாரும் மேற்கொண்டு தேவையற்ற முறையில் பத்திரிகைகளில் அதை தெரிவிப்பதும், அல்லது கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதும் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

ஒருவேளை இது தொடர்பாக தங்களது கருத்தை தெரிவிக்க யாராவது விரும்புவதானால் அவர்கள் அமைப்புரீதியாக வட்டார, நகர, மாவட்ட காங்கிரஸ் அமைப்புகள் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்தால் அதன் வழியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அக்கருத்து அனுப்பி வைக்கப்படும் என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+