தொகுதி பங்கீட்டு குழு-இளங்கோவனை ஒதுக்கி வைத்த காங்கிரஸ்!

சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோருக்கு இடம் தரப்பட்டது. சிதம்பரம், வாசன், ஜெயந்தி, தங்கபாலு ஆகிய நால்வருமே திமுகவுக்கு ஆதரவானவர்கள். குழுவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடம் தந்தாக வேண்டுமே என்ற காரணத்துக்காக ஜெயக்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில் உள்ள பெருந்தலைகளை மீறி இவர் இந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் ஏதும் செய்துவிட முடியாது என்று காங்கிரசாரே தெரிவிக்கின்றனர்.
காங்கிரசுக்கு 30+30+30 என்ற பார்முலா அடிப்படையில் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டு திமுகவை அதிர வைத்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக பேச்சு நடத்தும் குழுவிலும் இளங்கோவன், யுவராஜா போன்ற திமுக எதிர்ப்பாளர்களை சேர்த்து நமக்கு உண்மையிலேயே பெரும் தலைவலி தரப் போகிறார் ராகுல் என்று தான் திமுகவும் நினைத்திருந்தது.
ஆனால், சோனியா-குலாம் நபி ஆசாத் ஆகியோர் பேசி முடிவு செய்த குழு தான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம், வாசன், ஜெயந்தி இடம் பெற்றதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது திமுக.
குறிப்பாக இளங்கோவனுக்கு இதில் இடம் தராமல் காங்கிரஸ் ஒதுக்கியது திமுக தரப்பை தாஜாபடுத்த காங்கிரஸ் எடுத்துள்ள முயற்சியாகவே கருதப்படுகிறது. ராசா கைதால் கோபத்தில் உள்ள திமுகவிடம் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டதோடு, பாமகவை சேர்க்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனை போட்டு எரிச்சலடையச் செய்தது காங்கிரஸ்.
இந் நிலையில் இளங்கோவனையும் குழுவில் சேர்த்தால், அது திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒரேயடியாக கலகலக்க வைத்துவிடும் என்று கருதியே அவரை ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.
ஆனால், எப்படியும் இந்தக் குழுவில் இடம் தந்துவிடுவார் என்று பெரிதும் நம்பியிருந்தார் இளங்கோவன். இதன்மூலம் தனது ஆதரவாளர்களுக்கான தொகுதிகளை கேட்டு வாங்கிவிடலாம் என்ற நப்பாசையிலும் இருந்தார். திமுகவை மிகக் கடுமையாக விமர்சி்த்து வந்ததால், தனக்கு உரிய மரியாதை கொடுத்து குழுவில் சேர்த்துவிடுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் இளங்கோவன்.
ஆனால், இளங்கோவனின் இந்த ஆசையில் மண் விழுந்துவிட்டதால், அவரை நம்பி சீட் வாங்கலாம் என்றிருந்த காங்கிரசாரும் அவரிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டனராம்.
இதையடுத்து தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தி, தனது முக்கியத்துவத்தை தலைமைக்கு உணர்த்தச் சொல்லியிருக்கிறாராம இளங்கோவன்.
அவரது ஆதரவாளர்களான மத்திய அரசின் முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், தென் சென்னை மாவட்டத் தலைவர் மங்களராஜ் உள்ளி்ட்டோர் நேற்று இளங்கோவனுடன் ஆலோசனை நடத்தினர். அதில், மேலிடத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், முதல் கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
நாளை சத்தியமூர்த்தி பவனில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், உண்மையிலேயே இவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications