கூட்டணி: 'மருந்தை தேனில் கலந்து குடிப்பது மாதிரி'-ஈவிகேஎஸ்

திமுகவுடன் பேச்சு நடத்தும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் தனக்கு இடம் தரப்படாததைக் கண்டித்து இளங்கோவன் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். தனது ஆதரவாளர்களை விட்டு சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தச் செய்தார்.
மேலும் அவர்கள் மத்தியில் பேசுகையில் தங்கபாலுவையும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதையும் தாக்கினார். இதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறக் கூடத் தயாராகிவிட்டாரோ என்று எண்ணத்தை உருவாக்கியுள்ளார்.
இளங்கோவனின் ஆட்கள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் பெரும் கலாட்டா செய்து கொண்டிருந்தபோதே தங்கபாலு கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த தங்கபாலு நிருபர்களிடம் பேசுகையில்,
தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன். வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
அதன் பிறகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?, எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இளங்கோவன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தது குறித்துக் கேட்டதற்கு, சோனியா காந்தி எடுக்கும் முடிவை வரவேற்று செயல்படுத்துவது தான் காங்கிரஸ்காரர்களின் கடமை. இங்கு தனி மனித விருப்பத்திற்கு இடம் இல்லை. காங்கிரசால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பெருமை. எந்த தனி மனிதனாலும் காங்கிரசாருக்கு பெருமை கிடையாது என்றார்.
கசப்பான மருந்தை தேனில் கலந்து-இளங்கோவன்:
முன்னதாக நேற்று போராட்டம் நடத்திய தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய இளங்கோவன்,
கூட்டணி குறித்து இங்கு பேச விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர் இதுகுறித்து முடிவு எடுத்து அறிவுறுத்தியுள்ளார். எப்படி கசப்பான மருந்தை தேனில் கலந்து குடிக்கிறோமோ, அதுபோல் அவருடைய முடிவுக்கு கட்டுப்படுவோம்.
பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்கள், ஒதுக்கப்படும்போது சிறிய வருத்தம் ஏற்படுகிறது.
கட்சியில் பணி ஒதுக்கும்போதும், மாற்றுக் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைக்கும்போதும் அதில் யார் யாரை சேர்க்கவேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். எதிரணியில் (திமுகவில்) இருப்பவர்கள் ஜாம்பவான்கள்.
அவர்கள் குறித்து நாம் முன்னர் விமர்சனம் செய்தபோதும், அவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற ஜாம்பவான்கள் இடம் பெற்றிருக்கும் குழுவுடன் பேசுவதற்கு இணையாக காங்கிரஸ் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் குழுவில் இடம் பெறப் போகிறவர்கள் குறித்து டெல்லியில் குலாம் நபி ஆசாத்திடம் நான் தொடர்புகொண்டு பேசியபோது, குழுவில் நிச்சயம் நீங்கள் இடம்பெறுவீர்கள் என தெரிவித்தார். அப்போது, விஷயம் தெரிந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தையும், யசோதாவையும் குழுவில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் குழுவில் என்னையும் சேர்க்கவில்லை, நான் சிபாரிசு செய்தவர்களையும் சேர்க்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, இளங்கோவன் பெயர் குழுவில் இடம்பெறக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.
முன்பு அவர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோதே, கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டுச் சென்றவர்தான். உண்மையான காங்கிரஸ் தொண்டனின் சக்தி என்ன என்பது தங்கபாலுவுக்கு விரைவில் தெரியவரும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications