பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்-தட்டுப்பாட்டில் ஆவின்!
சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது.
கொள்முதல் விலையை உயர்த்துவதோடு, அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாலை சாலையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், தனியார் பால் உற்பத்தியாளர்களுக்கு வழக்கம் போல் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.
இதனால் அரசின் ஆவின் நிறுவனத்துக்கு பெரும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, வருவாய் துறை அதிகாரிகள் போலீசாருடன் தனியார் பால் கொள்முதல் மையங்களுக்கு சென்று, ஆவினுக்கு பால் வழங்குமாறு கோரி வருகின்றனர்.
தங்களிடம் பால் கேட்டு அரசு அதிகாரிகள் மிரட்டுவதாக தனியார் பால் கொள்முதல் மையங்களைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர்.
மேலும் சில பகுதிகளில் தனியாருக்கு கொள்முதல் மையங்களுக்குச் சென்ற பாலை அதிகாரிகள் வழிமறித்து, ஆவின் லாரிகளில் ஏற்றிச் சென்றதாகவும் புகார் கூறுகின்றனர். மேலும் சில தனியார் பால் பண்ணைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மிரட்டவில்லை-அமைச்சர் மறுப்பு:
இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஒரு முறை கூட பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் நான்கு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தப்ல போராட்டத்தால் பால் கொள்முதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் பால் வினியோகம் முழு அளவில் உள்ளது.
எங்களுக்குத் தேவையான பால் முழுமையாக கிடைத்து வருவதால், தனியாரிடம் இருந்து பால் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக அவர்களை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை.
லைசன்ஸ் இல்லாமல் இயங்கும் சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களுக்கும், பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கும் தான் சீல் வைத்துள்ளோம் என்றார்.
இந் நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications