சென்னை விமான நிலையத்தில் வரி ஏய்ப்புக்கு உதவிய சிபிஐ டிஎஸ்பி கைது
சென்னை: வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக சிபிஐ டிஎஸ்பி,சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகளே கையும் களவுமாகப் பிடித்தனர்.
அமெரிக்காவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்த வினோத்குமார், வரதன், சாதிக், கிரீஷ் ஆகியோர் வரி விதிப்புக்குட்பட வேண்டிய பொருள்களுடன் வந்தனர். இவர்களை வரவேற்க நாக்பூரில் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவில் டிஎஸ்பியாக உள்ள கே.ஏ.ஏ.சலாம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அமெரிக்காவில் இருந்து வந்த நபர்களை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி , வரிவிதிப்புக்கு உட்படும் வழியில் அல்லாமல், கிரீன் சேனல் வழியாக அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது, அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட சென்னையை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சலாமை கைது செய்தனர். வரிஏய்ப்பு செய்ய முயன்றதாக வினோத்குமார், வரதன், சாதிக், கிரீஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மேலும் சில சுங்கத்துறை அதிகாரிகள் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications