காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்
சிவகாசி: சிவகாசி அருகே டியூசன் ஆசிரியை மீது காதல் வசப்பட்ட மாணவன் அவரைKD கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ளது லிங்கபுரம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவரது மகள் நளினி (27). இவர் தற்போது ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு பயிற்சி வகுப்பு சென்று வருகிறார். பட்டதாரியான இவரிடம் கல்லூரி மாணவர்கள் டியூசன் படித்து வருகின்றனர்.
லிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் நடேஷ் பாண்டி (20). சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நளினியிடம் மாலை நேரத்தில் டியூசன் படித்து வந்தார்.
இதற்கிடையில் ஆசிரியை நளினிக்கும், மாணவன் நடேஷ் பாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 25.12.10 முதல் நளினியையும், நடேஷ் பாண்டியையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
வசந்தா தனது மகளை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மேலும் இந்த வழக்கு விவகாரம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் மாணவன் நடேஷ்பாண்டி, அவரது தந்தை பாண்டியன், தாய் சுதந்திரதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை நளினியை, மாணவன் நடேஷ் பாண்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கோவையில் தங்கியிருந்த நளினி, நடேஷ் பாண்டி ஆகியோரை கண்டுபிடித்த போலீசார், அவர்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆசிரியை மாணவன் ஒருவன் காதல் காரணமாக கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications