தூக்கத்திற்கு இடையூறு- நாகர்கோவிலில் தந்தையைக் கொன்ற மகன்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தூக்கத்திற்கு இடையூறாக இருந்த தந்தையை கிரைண்டர் குழவியால் தாக்கி மகன் கொலை செய்துள்ளார்.
நாகர்கோவில் அருகுவிளை ஆர்சி சர்ச் பகுதியில் வசித்து வந்தவர் மரிய பாக்கியநாதன். இவரது மகன் ஆரோக்கியராஜன்.
பாண்டிசேரியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து கொத்தவேலை, சென்டரிங் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஊருக்கு வந்தவர் உள்ளூரில் கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மரிய பாக்கியநாதன் இருமல் மற்றும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இரவி்ல் தூங்கும்போதும் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் தனது தூக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆரோக்கியராஜ் தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
அப்போது தாயார் ரோஸ்மேரி சாமாதனம் செய்துள்ளார். நேற்று முன்தினம் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மரிய பாக்கியநாதன் இருமிக் கொண்டிருந்தார். இதனால் நள்ளிரவில் தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ் வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக் கல்லை எடுத்து தந்தை மீது போட்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாக்கியநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜனை வடசேரி போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications