பட்ஜெட்டுக்குப் பிறகு பெட்ரோல் விலை குறைகிறது!

பெட்ரோலியப் பொருள்களின் அதிகபட்ச விலை5 மாநில தேர்தல்களில் மக்களின் வாக்குகளை இழக்கும் அபாயம் உயர்வு, இந்தியாவில் அத்யாவசியப் பொருள்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில மாதங்களில் 8 தடவை மத்திய அரசு உயர்த்தியது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 63 ரூபாய் 38 காசுக்கு விற்பனை ஆகிறது. ஸ்பீடு பெட்ரோல் 66 ரூபாய்க்கு வினியோகிக்கப்படுகிறது. டீசல் விலை லிட்டர் ரூ.40 ஆக உள்ளது. ஹைஸ்பீடு டீசல் 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து, மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று மத்திய அரசு அச்சப்படுகிறது.
எனவே விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பண வீக்கத்தை 7 சதவீத அளவுக்குக் குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 28-ந் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. சரக்கு, சேவை வரி தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.
இது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி சீராக்கும் என்று கருதப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்தவரை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்ற- இறக்கத்துக்கு ஏற்பதான் நிர்ணயிக்க முடியும். இது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி திட்டமிட்டுள்ளார். அதன்படி பெட்ரோல், டீசலுக்கான தீர்வை வரி மற்றும் சுங்க வரியை பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி குறைத்து அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
வரி குறைப்பு...
கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு தற்போது 7.5 சதவீதம் சுங்க வரி விதிக்கிறது. இந்த வரியை 2.5 சதவீதம் குறைத்து 5 சத வீதமாக்க மத்திய அரசு தீர் மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரி குறைப்பு எண்ணை நிறுவனங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருக்கும். ஏனெனில் தற் போது எண்ணை நிறுவனங்கள் ஒரு லிட்டர்பெட்ரோலுக்கு ரூ.2.50ம் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10ம் இழப்பைச் சந்திக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழக்கின்றன.
கச்சா எண்ணை மீதான சுங்கவரி குறையும் பட்சத்தில், எண்ணை நிறுவனங்களின் வருமான இழப்பு குறையும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களால் குறைக்க முடியும். எனவே மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு பெட்ரோலியப் பொருட்கள் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது. மார்ச் இந்த விலைக் குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தில்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications