'தெலுங்கானா': சட்டசபையில் 2 எம்எல்ஏக்களை அடித்து உதைத்த டிஆர்எஸ் எம்எல்ஏக்கள்
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபையில் ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மாநில ஆளுநர் நரசிம்மன் உரையாற்றினார்.
அப்போது தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையாற்றக் கூடாது என கூச்சலிட்டனர்.
அதேபோல தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் வேறு பிரச்சனைகளைக் கிளப்பி ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் சில எம்.எல்.ஏக்கள் கவர்னரிடமிருந்து உரையைப் பறித்து கிழிக்க முயற்சித்தனர். அதை அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர்.
இந் நிலையில் லோக்சத்தா கட்சி எம்.எல்.ஏ. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது பாய்ந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி எம்.எல்.ஏக்கள் அவரை அடித்து உதைத்தனர். மற்ற எம்.எல்.ஏக்கள் அவர்களிடமிருந்து நாராயணனை காப்பாற்றினர்.
அதே போல காங்கிரஸ் எம்எம்எல் பலடுகு வெங்கட ராவுக்கும் அடி உதை விழுந்தது. மேலும் ஆளுநரையும் சில எம்எல்ஏக்கள் தாக்க முயன்றனர். இதையடுத்து அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டு ஆளுநருக்கு பாதுகாப்பு தரப்பட்டது.
அவர் அவரச அவசரமாக உரையை படித்து முடித்துவிட்டு வெளியேறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications