நடிகர் கார்த்திக் திடீர் உண்ணாவிரதம்!

Subscribe to Oneindia Tamil

Karthick
மதுரை: நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் மதுரையில் இன்று திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும்,ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதப் போராடத்தை அவர் நடத்துகிறாராம்.

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து நடத்தப்படும் இந்த உண்ணாவிரதம் மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள கீழகுயில்குடி இடத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கார்த்திக் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் இந்த திடீர் போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+