அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி!

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான பஹ்ரைனி்ல் பெரும்பான்மையாக ஷியா இன மக்கள் இருந்தாலும், அங்கு ஆட்சியதிகாரம் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் பரம்பரையிடம் உள்ளது.
இந் நிலையில் மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள பியர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதையடுத்து அதை ஒடுக்க ராணுவம் இறக்கிவிடப்பட்டது.
இப்போது பியர்ல் சதுக்கத்தை ராணுவம் ஆக்கிரமித்தது. மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா, போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் எதிர்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர பியர்ல் துக்கத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். மன்னர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் நிபந்தனை விதித்தன. இருப்பினும் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுவிட்டன.
முன்னதாக போராட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையின்றி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் சிலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் நிஜ தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிபிசி தெரிவித்தது. இந் நிலையில் போராட்டம் நடத்தும் மக்களை கொல்லும் போக்கை கைவிட்டு, ஜனநாயகரீதியில் அவர்களுடன் பேச்சு நடத்துமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பஹ்ரைன் மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று இளவரசர் ஷேக் சல்மானிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் மீதான போலீசாரின் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனமும் தெரிவித்தார்.
இதையடுத்து பியர்ல் சதுக்கத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு எதிர்க் கட்சிகள் ஒப்புக் கொண்டதால் அமைதியும் திரும்பியுள்ளது.
மொராக்கோவிலும் மக்கள் போராட்டம்:
அதே போல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
10 நாடுகளில்...
மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது.
இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications