சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு-திமுக, விடுதலைச் சிறுத்தைகள் பேச்சு

அண்ணா அறிவாயலத்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் திமுக சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்எல்ஏ மற்றும், வன்னி அரசு பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது திருமாவளவன் 20 தொகுதிகளைக் கோரியதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 இடங்கள் தரப்பட்டன. இதையடுத்து அதிமுக அணியிலிருந்து இந்தக் கட்சி திமுகவுக்கு மாறிவிட்டது. அதிலிருந்து திமுகவுடன் இணைந்து இரு மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்களை விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்துள்ளது.
திமுகவுடன் மிகவும் தோழமையாக, திமுகவை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த முறை முதல்வர் கருணாநிதி 15 இடங்கள் வரை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆலோசனைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications