26ல் பெரம்பலூரில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு - இந்திய ஜனநாயக கட்சி
பெரம்பலூர்: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு பெரம்பலூர் ரோவர் விவசாயக் கல்லூரி அருகே வரும் 26- ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலர் எஸ். சண்முகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் நாளுக்குநாள் குறைந்து கொண்டே தான் போகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.
இயற்கை வளமிக்க இந்தியாவில் விளையக்கூடிய பொருள்களைகூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலைமையை மாற்றவும், விவசாயத்தை பாதுகாக்கவும் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 26-ம் தேதி பெரம்பலூரில் நடக்கிறது. இதற்கு கட்சி நிறுவனர் டாக்டர் ஆர். பச்சமுத்து தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. செங்கால்ரெட்டி மற்றும் தமிழக விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications