தீர்மானத்தை முன்மொழிய ஜெயந்தி நடராஜன் வராததால் ராஜ்யசபா ஒத்திவைப்பு
டெல்லி: குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் வராததால், மதிய உணவு இடைவேளைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேரிட்டது.
இதனால் அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தர்மசங்கடமாகி விட்டது. ராஜ்யசபாவில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்த்தன் திவிவேதி பேசினார். இதையடுத்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசுமாறு கூறி ஜெயந்தி நடராஜனை அழைத்தார் துணைத் தலைவர் ரஹ்மான்கான்.
ஆனால், நடராஜன் அப்போது சபையில் இல்லை. இதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சியினர் முன்மொழிந்து பேச வேண்டியவர் வராமல் இருப்பதா என்றும் கேட்டனர்.
இதனால் ஆளும் கட்சி தரப்பு நெளிந்தது. இதைப் பார்த்த ரஹ்மான் கான் மேலும் சர்ச்சை ஆகி விடாமல் தடுக்க ராஜ்யசபாவை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்த பிரதமர் மன்மோகன் சிங் அவையில்தான் இருந்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், கோத்ரா தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம், காங்கிரஸ் கட்சியின் கருத்தை தெரிவிப்பதற்காக தான் அவையிலிருந்து சிறிது நேரம் வெளியேறியதாகவும், நடந்ததைக் கேள்விப்பட்டு ராஜ்யசபா தலைவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications