'சனாதன' முறையில், ஜெயேந்திரர் தலைமையில் வருண் காந்தி கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

Maneka Gandhi with Yamini
வாரணாசி: முற்றிலும் 'சனாதனி' முறையில், வருண் காந்தி, யாமினி ராய் கல்யாணம் நடைபெறவுள்ளதாம். இந்த கல்யாண சடங்கு, சம்பிரதாயங்களை காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மேற்பார்வையிட்டு நடத்தவுள்ளார்.

இந்திரா காந்தியின் இளைய மருமகள் மேனகா காந்தியின் ஒரே மகன் வருண் காந்தி. இவர் பாஜகவில் எம்.பியாக இருக்கிறார். இவருக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த யாமினி ராய் செளத்ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் 6ம் தேதி வாரணாசியில் நடைபெறவுள்ளது.

இந்த திருமணம் முற்றிலும் இந்து வைதீகப்படி நடைபெறவுள்ளதாம். திருமண வைபவங்களை காஞ்சி ஜெயேந்திரர் மேற்பார்வையிட்டு நடத்தவுள்ளாராம்.

வாரணாசியிலி் உள்ள ஸ்ரீ காசி காமகோடீஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது. தென்னிந்திய கோவில் கட்டடக் கலை வடிவமைப்பில் வட இந்தியாவில் கட்டப்பட்டுள்ள வெகு சில கோவில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவில் காஞ்சி காமகோடி மடத்திற்குச் சொந்தமானதாகும். இங்குதான் வருண் காந்தி கல்யாணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு வெகு சில விருந்தினர்களை அழைக்கப்பட்டுள்ளனர். ஜெயேந்திரர்தான் திருமண வைபவத்தை மேற்பார்வையிட்டு நடத்தி வைக்கப் போகிறார் என்பது கோவில் மேனேஜர் மணி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+