மீனவர் வலையில் மீனுக்கு பதில் சிக்கிய சிசு: போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: உவரி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் மீனுக்கு பதில் இறந்த குழந்தையின் உடல் சிக்கியது.
இன்று காலை மீனவர்கள் உவரி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் வீசிய வலையில் ஒரு குழந்தை பிளாஸ்டிக் பையில் சுற்றிய நிலையில் சிக்கியது.
அந்த வலையில் இருந்த அந்தக் குழந்தை இறந்து கிடந்தது. இது குறித்து மீனவர்கள் உவரி போலீசில் புகார் செய்தனர்.
தவறான சேர்க்கையால் பிறந்த குழந்தையாக இருந்ததால் யாரோ அதை கடலில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications