கோழிக்கோடு குண்டு வெடிப்பு : கலவரத்தை தூண்ட காங் போ்ட்ட சதி-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கோழிக்கோடு குண்டு வெடிப்பு குறி்த்து முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரத்தை அடுத்த நரிக்காட்டேரி பகுதியில் கடந்த சில தினங்களாக முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் நரிக்காட்டேரி பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பயங்கர சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த வீ்ட்டுக்கு வெளியே 3 பேர் உடல் சிதறி பிணமாகி கிடந்தனர். 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.
உடனே அவர்களை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறுதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் நேற்று காலை இறந்தனர். ரபீக், சமீர், ரியாஸ், ஷபீர், சபீர் ஆகியோரே இறந்தவர்கள். மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் கோழிக்கோடு எஸ்பி நீலேஷ்குமார் மற்றும் நாதாபுரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் கட்சியை சேர்நதவர்கள் என்பதும், வீட்டில் வெடிகுண்டு தயாரித்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது குண்டுகள் வெடித்ததும் தெரிய வந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றையும், ரூ. 9 லட்சத்துகான காசோலையும், ஏராளமான சி்ம் கார்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்களையும் கைப்பற்றினர்.
குண்டு வெடிப்பு நடந்த நரிக்காட்டேரியில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்காக எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications