இன்போஸிஸ் சிஇஓவாக வெளிநாட்டவர் வரக்கூடும்! - பிஎன்பி பாரிபஸ் அறிக்கை
பெங்களூர்: இன்போஸிஸ் நிறுவனத்துக்கு வெளியிலிருந்து ஒரு சிஇஓவைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது அந்நிறுவனம்.
அடுத்த 2-3ஆண்டுகளில் இன்போஸிஸ் குடும்பத்துக்கு வெளியில், இந்தியரல்லாத ஒருவர் சிஇஓவாக வர வாய்ப்புள்ளதாக பிஎன்பி பாரிபஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது இன்போஸிஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஸ்டீவ் பிராட் அநேகமா இந்தப் பதவிக்கு வரக்கூடும் என்கிறது அந்த அறிக்கை.
நாராயண மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது இன்போஸிஸ் நிறுவனம். இப்போது இந்நிறுவனத்தின் தலைவராக பதவி வகிக்கிறார் நாராயணமூர்த்தி.
வரும் ஆகஸ்ட் மாதம் அவரது பதவிக்காலம் முடிகிறது. அவரது பதவிக்கு நிறுவனத்தின் இப்போதைய சிஓஓ எஸ் கோபாலகிருஷ்ணன் வருகிறார்.
கோபாலகிருஷ்ணனின் பதவிக்கு நிறுவனத்தின் சிஓஓவும் இணை நிறுவனருமான எஸ் டி ஷிபுலால் வருவார் என்று கூறப்படுகிறது. ஷிபுலாலுக்குப் பிறகு வரும் சிஇஓ நிச்சயம் இன்போஸிஸ் குடும்பத்திலிருந்து வரமாட்டார் என்றும், வெளிநாட்டைச் சேர்ந்தவராகவே அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இப்போது இன்போஸிஸ் கன்சஸல்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஸ்டீவ் பிராட் உள்ளார். அடுத்த இரு ஆண்டுகளில் இவரை இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக நியமிக்கக் கூடும் என்று பிஎன்பி பாரிபஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது இன்போஸிஸ் நிறுவனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications