தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளி-நாடாளுமன்றம் முடங்கியது

ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக முடங்கிப் போய் பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கிய நாடாளுமன்றம் தற்போது தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளிகளைச் சந்தித்து வருகிறது.
இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், பாஜகவினரும் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இவர்களுடன் தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டதால் நாடாளுமன்றத்தில் ஒரு அலுவலையும் நடத்த முடியவில்லை.
இன்று மட்டும் மொத்தம் 6 முறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக 3.15 மணிக்குக் கூடிய லோக்சபாவை நாள் முழுமைக்கும் சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
ராஜ்யசபாவிலும் இன்று தெலுங்கானா விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், நடிகை விஜயசாந்தியும் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இருவரு்ம் சபாநாயகர் இருக்கை முன்பு நின்றபடி ஆவேசமாக கோஷமிட்டனர்.
ஜெய் தெலுங்கானா, தெலுங்கானா தனி மாநிலம் தேவை என்றும் கூறி அவர்கள் கோஷமிட்டதால் அவையே பரபரப்பாக காணப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications