கேரளாவிருந்து இறக்குமதியான ரூ 10 கோடி தேங்காயை கடலில் கொட்டிய இலங்கை!
கொழும்பு: பத்துக் கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமானமுள்ள தேங்காய்களை இலங்கை அரசு கடலில் கொட்டி அழித்தது.
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவியது. அப்போது கேரளாவிலிருந்து பெருமளவில் தேங்காயை இறக்குமதி செய்திருந்தது இலங்கை. நாற்பது இலட்சம் தேங்காய்கள் இரண்டு கப்பல்கள் மூலம் கொழும்பு வந்து சேர்ந்து.
ஒரு தேங்காயை இறக்குமதி செய்வதற்கு 26.60 ரூபா (ரூபா என்பது இலங்கைப் பணம்) வரை செலவிட்டிருந்தது அந்நாட்டு அரசு. மொத்தம்1050 இலட்சம் ரூபா அதாவது பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருந்தது.
ஆயினும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கெட்டுப் போயிருந்தன. அதன் காரணமாக நாற்பது இலட்சம் தேங்காய்களும் சில தினங்களுக்கு முன் கடலில் கொட்டப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை நாட்டுக்குள் கொண்டு வர விடாமல் தடுத்தவர் விவசாயத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன என தெரியவந்துள்ளது. விதை மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தியே அவர் அதனைத் தடுத்திருந்தார்.
அதன் மூலம் நாட்டில் தேங்காய் விலை கண்டபடி அதிகரித்திருப்பதுடன், இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு தேங்காய்களையும் கடலில் கொட்ட நோ்ந்துள்ளது. பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் இது என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் விமர்சித்துள்ளன.
இவ்வாறு தேங்காய் இறக்குமதியைத் தடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேன இலங்கையின் பெரும் தென்னந்தோப்பு உரிமையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக சக அமைச்சர் ஒருவரே குற்றம்சாட்டியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications