வேட்பாளர் தேர்வு-தேமுதிக நேர்காணல் ஆரம்பம்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்கியது.
கட்சியின் தலைவரான விஜய்காந்த் தலைமையிலான நிர்வாகிகள், விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
முதல் தொகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. 3 நாட்கள் இந்த நேர்காணல் நடக்கும்.
இந்தக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக சார்பில் போட்டியிட 6,203 பேர் விருப்ப மனு:
இதற்கிடையே பாமக சார்பில் போட்டியிட 6,201 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
கடந்த 3ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. திண்டிவனம்
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச் செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.
விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 6,203 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாமக இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி போட்டியிடக் கோரி பாமகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அன்புமணியின் மனைவியும்
பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளம்யா செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிடக் கோரியும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அதே போல ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்கத் தலைவர் குரு போட்டியிடக் கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications