திமுகவிலிருந்து வெளியறிய புதிய பாரதம் 40 தொகுதிகளில் போட்டி
சென்னை: ஒரே ஒரு சீட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்து திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய புதிய பாரதம் கட்சி 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் இணைந்து செயல்பட்டு வருகிறது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டேன். எல்லா தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றிக்கு நாங்கள் உதவி செய்தோம். 2009 எம்.பி. தேர்தலில் சீட்டு கேட்டோம். சட்டசபை தேர்தலில் தருவதாக கூறினார்கள். உள்ளாட்சி மன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் கேட்டோம். திருவாலங்காடு ஒன்றிய தலைவர் பதவிக்கு இடம் தந்தார்கள். பின்னர் அந்த இடத்தையும் பிடுங்கி கொண்டனர். இடம் ஒதுக்கவில்லை.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி 8 தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றோம். ஒரு தொகுதி மட்டும் தருவதாக கூறினார்கள். மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்கள் முடியாது என்றதால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தோம்.
பலத்தை காட்ட 40 தொகுதிகளில் புரட்சி பாரதம் தனித்து போட்டியிடும். பூந்தமல்லி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இரண்டொரு நாளில் 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications