சட்டசபை தேர்தல்: நாகர்கோவிலில் ரஜினி மன்ற நிர்வாகி போட்டி
குமரி: வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
தேர்தல் வரும்போதெல்லாம் ரஜினி ஆதரவு யாருக்கு என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இம்முறை ரஜினியின் நிலை என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாய் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் குமரி மாவட்ட இளைஞரணி தலைவர் கலுக்குடி சதிஷ்பாபு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த தேர்தல்களில் தலைவர் பிற கட்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி எங்களை அவர்கள் வெற்றிக்கு பாடுபடுமாறு கூறினார். அதே போல் நாங்களும் அவர்களுக்காக உழைத்தோம். ஆனால் அவர்கள் எங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்தினார்கள். இதனால் எங்கள் மன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
நாங்கள் பல வருடங்களாக மாற்று கட்சியினர் பின்னால் போகவே முடிந்தது. இதனால் எங்கள் சுயமரியாதையை நிலைநாட்டவும், மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நல்லதொரு நிர்வாகம் அமைப்பதற்காக ரசிகர்களின் விருப்பதுக்காகவும், நான் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.
ரஜினி ரசிகர்கள், இளம் பெண்கள் மற்றும் மாணவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications