234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பகுஜன் சமாஜ் முடிவு
சென்னை: தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும் பலம் பொருந்திய சில கட்சிகளில் பகுஜனும் ஒன்று. இக்கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்டிராங் செயல்படுகிறார். வருகிற சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் மானே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார்.
இன்று 51 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மற்ற வேட்பாளர்கள் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழக தேர்தல் பிரசாரத்திற்காக உ.பி. முதல்வரும், கட்சித் தலைவருமான மாயாவதி வருகிறார். 3 நாட்கள் அவர் பிரசாரம் செய்வார் என்று கூறினார் மானே.












Click it and Unblock the Notifications