கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட அச்சுதானந்தனுக்கு சீட் இல்லை
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட தற்போதைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்கவில்லை.
4 முறை எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான அச்சுதானந்தனுக்கு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படவில்லை என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று கட்சி அலுவலகத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் முன்னிலையில் உயர் மட்டக்குழு கூட்டம் நடந்தது. அதில் வரும் தேர்தலில் போட்டியிட அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்க செயற்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த முடிவு மாநிலக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதும் அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று மாநிலக் குழு கூறியது. குறிப்பாக அச்சுதானந்தனின் எதிர்ப்பாளரான பினரயி விஜயன் அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்கவே கூடாது என்றார். ஆனால் கட்சித் தலைமை அவருக்கு சீட் கொடுக்குமாறு மாநிலக் குழுவிடம் பரிந்துரைத்து. தற்போதைய தேர்தலில் பினரயி விஜயனுக்கும் சீட் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அச்சுதானந்தனுக்குப் பிறகு கட்சியை உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்துவார் என்று தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தான் அச்சுதானந்தன் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அசுதானந்தனுக்கும், விஜயனுக்கும் நடந்த போராட்டத்தில் விஜயனின் கை ஓங்கி இருந்தது. இறுதியில் அவர் பொலிட்ரபீரோவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications