கொடநாடு எஸ்டேட் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கொடநாடு எஸ்ட்டேட் பொதுப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் பொதுப் பாதையை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முகுந்தம் சர்மா, தவே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் நேரில் ஆஜராகி, கொடநாடு எஸ்டேட்டின் நடைபாதை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுவதால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்காக எஸ்டேட் நிர்வாகம் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினார்.
எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் பதிலளிக்கையில், இரவு நேரத்தில் கொடநாடு பகுதிகளில் சமூக விரோதிகளின் நடவடிக்கைகள் இருப்பதால்தான் இரவு கொடநாடு எஸ்டேட்டின் நடைபாதை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், கொடநாடு எஸ்டேட் நடைபாதையை 24 மணி நேரமும் திறந்து விட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து எந்தத் தொகையையும் வசூலிக்கக்கூடாது. கொடநாடு எஸ்டேட் அருகே போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கின் விசாரணை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications