வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்-சிபிஎம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வைகோ விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மீண்டும் அதிமுக அணியில் இணைந்து தேர்தலை சந்திக்க மதிமுக முன்வர வேண்டும். இதன் மூலம் திமுகவுக்கு எதிரான வலுவான அணியாக அதிமுக மாற முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications