சீட் கிடைக்காத கடலூர் திமுக எம்.எல்.ஏ போர்க்கொடி-சுயேச்சையாக போட்டி?
கடலூர்: சீட் கிடைக்காத கோபத்தில் இருக்கும் கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இதுவரை இதுகுறித்து அவர் முடிவெடுக்கவில்லையாம்.
அதிமுகவில் மட்டுமல்லாமல் திமுகவிலும் கூட பலர் சீட் கிடைக்காத கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சீட் கொடுத்ததைக் கண்டித்து ஒருவர் தீக்குளிக்க முயன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடலூர் தொகுதி வேட்பாளராக மாநில மாணவர் அணி அமைப்பாளர் இள. புகழேந்தி அறிவிக்கப்பட்டதற்கு, தற்போது கடலூர் உறுப்பினராக உள்ள அய்யப்பன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
பல இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அய்யப்பன் ஆதரவாளர்கள் வெட்டிச் சாய்த்தனர். நகர திமுக அலுவலகத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலவுகிறது.
அய்யப்பனுக்கு ஆதரவாக பலரும் திரண்டு வருகின்றனர். திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அய்யப்பனுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஆனால் வேட்பாளர் மாற்றம் கிடையாது என்று திமுக தலைமை அறிவிவித்து விட்டது. இதையடுத்து திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்று அய்யப்பனை அவரது ஆதரவு திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அய்யப்பன் கூறுகையில், நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னும் அவகாசம் இருப்பதாக கருதுகிறேன். யோசித்து செய்வேன் என்றார் அவர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications