தென்காசியி்ல் சரத்குமார், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி

Subscribe to Oneindia Tamil

Sarath Kumar
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களில் தென்காசியில் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

முதல் முறையாக போட்டியிடும் சரத்

56 வயதாகும் சரத்குமார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1996ம் ஆண்டு அவர் திமுகவில் இணைந்தார். அக்கட்சி சார்பில் 1998ம் ஆண்டு எம்.பி தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டுத் தோற்றார்.

பின்னர் 2002ல் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு திமுகவுடன் ஏற்பட்ட கசப்பால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஆனால் சேர்ந்த வேகத்தில் விலகிய அவர் 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார். அதில் அவரது கட்சி அத்தனை இடங்களிலும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. மேலும், எந்தக் கட்சியின் வெற்றிக்கும் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சரத்குமார் இதுவரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை. மேலும் சட்டசபைத் தேர்தலிலும் இதுவரை அவர் போட்டியிட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக, அதுவும் கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக போட்டியிடுகிறார். அதிமுகவின் பலத்துடன் அவர் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் நிலவுகிறது.

ஆனால் அவருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடார் சமுதாய அமைப்புகளும் திரண்டு நிற்பதால் சரத்குமாருக்கு தென்காசியில் பெரும் மல்லுக்கட்டு காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+