சங்கரராமன் கொலை வழக்கு: சாட்சி விசாரணையை நிறுத்தக்கோரி போலீஸ் அதிகாரி வழக்கு
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணையை நிறுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி. சக்திவேலு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சக்திவேலு தாக்கல் செய்துள்ள மனுவில், 3.9.04 அன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதன் மேலாளராக இருந்த சங்கரராமன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய நான் இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அப்போதைய சூப்பிரண்டால் உத்தரவிடப்பட்டேன்.
இந்த வழக்கில் 500க்கும் மேற்பட்டவர்களை நான் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தேன். ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்துள்ளேன். இந்த வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான ரவிசுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார்.
இந்த நிலையில் வழக்கின் சாட்சி விசாரணை நடந்த நிலையில் 31.3.06 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். சாட்சி விசாரணைக்கு உதவிக்காக என்னை அரசுத் தரப்பினர் அழைக்கவில்லை. ஆனால் சாட்சிகள் பலர், வாக்குமூலத்துக்கு முரணாக பல்டி' சாட்சி அளித்து வருகின்றனர். ரவிசுப்பிரமணியமும் முரண் சாட்சி அளித்துள்ளார்.
முரண் சாட்சி அளித்த எந்த ஒருவர் மீதும் வழியிருந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு மறுக்கிறது. தலைமை விசாரணை அதிகாரி என்ற முறையில் நான்தான் கடைசி சாட்சி. கேஸ் டயரி' என்ற பிரதான ஆவணத்தின் அடிப்படையில்தான் நான் சாட்சி அளிக்க வேண்டும்.
ஆனால் நான் சாட்சி சொல்வதை தவிர்ப்பதாகவும் 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் சாட்சி அளிப்பதற்காக பழையதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட கேஸ் டைரி'யை காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கேட்டேன். அவர் தர மறுத்துவிட்டார். சாட்சிக் கூண்டில் ஏறி அரசுத் தரப்புக்கு எதிராக பேசினால் என்னையும் பல்டி சாட்சியாக அறிவித்து வழக்கை முடித்துவிடுவார்கள் என்று என்னிடம் அவர் தெரிவித்தார்.
ஒரு சட்டவிரோத காரியத்துக்கு துணைபோக நான் விரும்பவில்லை. இதனால் தான் நான் நீதிமன்றத்தில்
ஆஜராக விரும்பவில்லை. நான் சாட்சி அளிக்க வேண்டுமென்றால், முதலில் பல்டி சாட்சிகள் அனைவர் மீதும் சி.ஆர்.பி.சி. 308ம் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, பல்டி சாட்சிகள் அனைவரையும் அழைத்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களை தப்பவிடும் எண்ணத்தில் என்னை பல்டி சாட்சியாக கருதக்கூடாது.
இதுபற்றி உள்துறை செயலாளருக்கு 14ம் தேதி கடிதம் எழுதினேன். அன்று எனக்கு, வழக்கை விசாரிக்கும் புதுச்சேரி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் இருந்து சாட்சி அளிக்கும்படி சம்மன் வந்தது. இந்த வழக்கில் உண்மை நிலைக்க வேண்டுமென்றால் நான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும்வரை சாட்சி விசாரணையை நிறுத்த வேண்டும்.
முரணாக சாட்சி அளித்த ரவிசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கவும், மற்ற பல்டி சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications