For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!

By Shankar
Google Oneindia Tamil News

Air India
டெல்லி: கடன், பணியாளர் பிரச்சினை என பல தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் தரமாட்டோம் என எண்ணெய் நிறுவனங்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளன.

இனி தினமும் பெட்ரோல் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே, எரிபொருள் தர முடியும் என உறுதியாக நிற்கின்றன இந்த நிறுவனங்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு நாள் பெட்ரோல் பில் ரூ 18.5 கோடி. இதுவரை அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வைத்துள்ள கடன் மட்டும் ரூ 2400 கோடி.

ஏற்கெனவே நஷ்டத்தில் தவிக்கும் தங்களால், ஏர் இந்தியாவின் இந்தக் கடன் சுமையையும் தாங்க முடியாது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து விவகாரம், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் சென்றுள்ளது. இந்த விஷயத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியுடன் பேசி முடிவெடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

English summary
Keeping cash-strapped Air India airborne is now proving to be an uphill task for the government. Almost four months after putting it on cash-and-carry, oil marketing PSUs have warned that jet fuel supply to the Maharaja could soon be stopped unless their daily bill is cleared in full.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X