மோனிகா படத்திற்கு தடைவிதிக்கக் கோரி ராடியா வழக்கு
டெல்லி: நீரா ராடியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மோனிகா படத்தை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டுள்ள மோனிகா படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று அரசியல் தரகர் நீரா ராடியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
'மோனிகா - படுகொலை அரசியல்' என்னும் பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த படத்தில் தன்னைப் பற்றி கூறப்பட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீரா ராடியா சார்பில் அவரது வழக்கறிஞர் அனிப் சச்தே தெரிவித்துள்ளார்.
என் கதையை படமாக்க நான் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று அந்த மனுவில் ராடியா கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி வி.கே. ஜெயின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அப்படத்தின் தயாரிப்பாளர் குஷ் பாக்கவாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வரும் 30-ம் தேதிக்குள் 'மோனிகா' படத்தின் சி.டி.யை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications