தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் திடீர் விபத்து-5 பேர் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டதில் 5 பேர் கருகி பலியானார்கள்.
தூத்துக்குடி அருகே ஆத்தூர் முக்காணியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வெடிபொருள் தயாரிப்பு பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வெடி மருந்துகள் வெடித்து நாலா திசைகளிலும் சிதறின. இதில் கட்டிடங்கள் இடிந்து தடைமட்டமானது. இந்த வெடி விபத்தில் அதே இடத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
விபத்துக்கான காரணம் குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications