அதிமுகவின் சிப்பாயாக மாறியுள்ள விஜயகாந்த் விரைவில் சிப்பந்தியாகி விடுவார்-கார்த்தி
செங்கம்: அதிமுகவின் சிப்பாயாக தற்போது மாறியுள்ள விஜயகாந்த், தேர்தலுக்குப் பின்னர் சிப்பந்தியாக மாறி விடுவார் என்று கூறியுள்ளார் 'ஒயிட் காலர்' அரசியல் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம்.
கார்த்தி சிதம்பரம் தேர்தல் நேரத்து பிரசாரப் பேச்சை தொடங்கியுள்ளார். செங்கம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகையின் தேர்தல் அலுவலகத்தை பெங்களூர் மெயின்ரோட்டில் திறந்து வைத்தார் கார்த்தி.
பின்னர் அவர் பேசுகையில்,
சொன்னதை செய்பவர் செய்வதை சொல்பவர் தான் கலைஞர். இலவச டி.வி. காஸ், 108 ஆம்புலன்ஸ், என பல்வேறு மக்கள் திட்டங்களை கூறி அதனை 100க்கு 100 சதவீதம் முடித்து செயல்படுத்தும் கூட்டணி தான் என்றும் மத்தியிலும் மாநில சேவையில் திறம்பட இருக்கிறது.
போயஸ் கார்டன் சென்றவுடன் கேப்டன் சிப்பாயாக மாறிவிட்டார். தேர்தல் முடிந்ததும் சிப்பந்தியாக மாறிவிடுவார்.
தேர்தல் அறிக்கைகளை ஜெயலலிதா காப்பியடித்து உள்ளார். இதற்கு முன் அளிக்க மனம் இல்லாத எதிரணியினர்.
இப்போது எப்படி கொடுப்பார்கள். ஏழை, எளிய மக்கள் தொகுதிக்காக பாடுபடும் பண்பானவர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை சிறப்பாக சேவை செய்யும் மனம்பக்குவம் மனிதர் அவர் என்றார் அவர்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, பின்னர் அதிலிருந்து டிஸ்மிஸ் ஆகி, ப.சிதம்பரம் கோஷ்டியில் போய் ஐக்கியமானவர் செல்வம். இருப்பினும் இந்த நிமிடம்வரை அவர் எம்.எல்.ஏ. பதவியில் தொடருகிறார். அவர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் பாயவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications