தேர்தல் ஆணைய வாகன சோதனைக்கு தடை விதிக்க முடியாது-உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது முதல் தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான நடவடிக்கை வாகன சோதனை.
தமிழகம் முழுவதும் வாகனங்களை தேர்தல் அலுவலர்களும், போலீஸ் படையினரும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு அதில் பணம், பொருள் இருக்கிறதா என்பதை சோதனையிட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதேபோல வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு அதுவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கடும் கெடுபிடி சோதனை காரணமாக பெரும் குழப்பமும், அமளி துமளியும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை சேர்த்து விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது. தேர்தலை நேர்மையாக நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
பணம், பொருள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications