தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் வருத்தப்படுவார்-எஸ்.வி.சேகர்
தஞ்சை: காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க முனைப்போடு இருக்கும் சீமானுக்கு திமுக, பாமக வேட்பாளர்களை எதிர்க்க தைரியம் இருக்கிறதா என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிக்காததில் கவலை இல்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் வருத்தப்படுவார். ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த முன்உதாரணம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. சூழ்ச்சி வென்றதாக வரலாறே இல்லை. தங்கபாலுவுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடலாம்.
காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்று கூறும் சினிமா இயக்குனர் சீமானுக்கு திமுக அல்லது பாமக வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே சீமான் தான் சிங்கள பெண் பூஜாவை நாயகியாக வைத்து தம்பி என்ற படத்தை எடுத்தார். அப்போது அவரது தமிழ் உணர்வு எங்கே போனது? என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications