சுயேட்சைகளுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கோரிக்கை
மதுரை: தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இதில் 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக போட்டியிடாத சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக எங்களது கட்சி போட்டியிடும் பாளையங்கோட்டை, மதுரை தெற்கு, திண்டுக்கல், பெரியகுளம் தொகுதிகளிலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் திருத்துறைப்பூண்டி தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படும். இது எங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும்.
எனவே, தாங்கள் தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கியிருப்பதை மாற்றி, அவர்களுக்கு வேறு சின்னம் ஒதுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதன்மூலம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலக் குழு அலுவலகச் செயலாளர் எஸ். ரமணி ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை நேரில் சந்தித்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன சோதனை- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு
வாகன சோதனை விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன சோதனையி்ல் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதி்முக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மதிமுகவினர் இந்த தேர்தலை பொதுமக்களோடு சேர்ந்து சந்திக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அவர்கள் விலகிவிட்டனர்.
மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற எண்ணம் வந்தபிறகு மதி்முக விலகல் தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications