முரசு சின்னம் பதித்த துணிகளை மொத்தமாக விற்க உயர்நீதிமன்றம் தடை
சென்னை: முரசு சின்னம் பதிக்கப்பட்ட ஜவுளித் துணிகளை மொத்தமாக விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்பூர் வல்லம் பாரதிநகரைச் சேர்ந்த முரளிமோகன் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
நான் பின்னலாடை தயாரிக்கும் தொழிலில் இருக்கிறேன். நான் தயாரிக்கும் பனியன் உள்ளிட்ட ஆடைகளில் முரசு சின்னம் பதிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சின்னத்துக்கு நான் காப்புரிமை பெற்றுள்ளேன்.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் கமிஷனின் கெடுபிடியாக நடவடிக்கைக்கு மத்தியில், இந்த முரசு சின்னத்தை நான் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. இதனால் எனது தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்படும்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் தொழில் செய்யும் உரிமை பாதிக்கப்படுகிறது. தேர்தல் முடியும்வரை முரசு சின்னத்தை தே.மு.தி.க. மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தொழிலை பாதிக்கக் கூடியதாக உள்ளது. சின்னம் இல்லாமல் துணியை விற்பனை செய்ய முடியாது.
எனவே எனது தொழிலை பாதுகாப்பது பற்றி தேர்தல் கமிஷனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் முரளிமோகன்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பின்னர் பிறப்பித்த உத்தரவில்,
முரசு சின்னத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதுபோன்ற சின்னங்களை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கு சட்டத்தில் தடையில்லை.
முரசு சின்னத்தை வர்த்தக குறியீடாக வைத்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளால் அது பயன்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சினை பற்றி மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிக்கென்று இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அது எந்த வகையிலும் மனுதாரரின் தொழில் நடவடிக்கையில் குறுக்கே வராது.
அந்த சின்னத்தை வைத்துள்ள கட்சியுடன் மனுதாரரின் தொழில் இணைப்பாக உள்ளதாக கருதப்பட முடியாது. என்றாலும், தேர்தல் முடியும்வரை முரசு சின்னம் போட்ட ஆடைகளை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யமாட்டோம் என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் அந்த சின்னம் அச்சடிக்கப்பட்ட உடைகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications