கலைஞர் டிவியில் 'ஜெயலலிதா, சசிகலா' புலம்பல்!
சென்னை: அரசியல் கட்சிகளின் டிவிகளில் இடம் பெறும் விளம்பரங்களில் கலைஞர் டிவியில் வெளியான ஒரு விளம்பரம் அனைவரையும் கவருவதாக உள்ளது. காரணம், திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் புகழ்ந்து கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.
தேர்தல் பிரசார சமயத்தில் ஏராளமான நூதனங்களைக் காணும் பாக்கியம் மக்களுக்குக் கிடைக்கும். காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள். கும்பிடுவார்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி ஓட்டுப் போடுங்கள் என்று கெஞ்சுவார்கள். இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள் ஓட்டைக் கேட்பதற்காக.
இப்போது எலக்ட்ரானிக் காலமாகி விட்டதால் நூதன விளம்பரங்களின் தாக்கமும் அதிகமாகியுள்ளது.
இந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் டிவிகளில் அவரவர் திறமைக்கேற்ப வித்தியாசமான விளம்பரங்களைப் புகுத்தி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
இதில் திமுக சற்று ஒரு படி மேலே போய், ஜவுளிக்கடை விளம்பரங்களுக்கு எடுக்கப்படுவது போல தனது ஆட்சியின் திட்டங்களை விளக்கும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது.
சில நாட்களாக ஒரு நூதன விளம்பரம் வெளியானது. அதில் ஜெயலலிதாவைப் போல ஒரு பெண்மணியும், சசிகலாவைப் போல ஒரு பெண்மணியும் தனி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு டேபிள் உள்ளது - மதுக் கடை பார்களில் இருப்பது போல.
அதில் ஜெயலலிதாவைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்மணி, திமுக அரசின் திட்டங்கள் மக்களை கவர்ந்து விட்டதாக கூறி புலம்புகிறார். அதற்கு சசிகலா போன்ற தோற்றத்தில் உள்ள பெண், நாம தப்பித் தவறி ஆட்சிக்கு வந்துட்டா அதையெல்லாம் ரத்து செய்து விடலாம் அக்கா என்று ஆறுதல் கூறுகிறார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்படும் 'ஜெயலலிதா', இதன் மூலம் ஏழைகளையெல்லாம் மயக்கி விட்டாரே கருணாநிதி என்று புலம்புகிறார்.
வித்தியாசமான இந்த விளம்பரம் அனைவரையும் கவர ஆரம்பித்துள்ளது.
இது போதாதென்று முன்பு திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவின்போது ரஜினிகாந்த், சரத்குமார், ராகவா லாரண்ஸ் உள்ளிட்டோர் கருணாநிதி அரசின் திட்டங்களைப் பாராட்டிப் பேசியதையும் இப்போது தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தி வருகிறது திமுக. இதுவும் கலைஞர் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications