தேர்தல் விதி மீறல் செய்திகள்-ஜெயா டிவி, ஹெட்லைன்ஸ் டுடே மீது திமுக புகார்
சென்னை: தேர்தல் விதிகளை மீறும் வகையில் செய்திகளை வெளியிட்ட ஜெயா டிவி மீதும், ஹெட்லைன்ஸ் டுடே சானல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது
முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான செய்திப் படத்தை நேற்று இரவு 10 மணி முதல் பத்து முப்பது மணி வரை ஹெல்டைன்ஸ் டுடே டிவி ஒளிபரப்பியது. இது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானதாகும்.
இதுகுறித்து நேற்று இரவே தொலைபேசி மூலம் தேர்தல் ஆணையத்திற்குப் புகார் தரப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கான பணி ஊதியம் குறைக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறியதை பேட்டியாக ஜெயா டிவி ஒளிபரப்பியது. இது முற்றிலும் தவறான தகவலாகும்.
எனவே ஜெயா டிவி மீதும், ஹெட்லைன்ஸ் டுடே டிவி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறான செய்திகள் ஒளிபரப்பாவது தடுக்கப்பட வேண்டும் என்று திமுக தனது புகாரில் கூறியுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!











Click it and Unblock the Notifications