திமுக, அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல்: கரூரில் பதற்றம்
கரூர்: தேர்தல் முன் விரோதம் காரணமாக திமுக, அதிமுக நிர்வாகிகள் இருவர் மோதிக் கொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவடியான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா (43). திமுக பிரதிநிதி. இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரதிநிதி வடிவேல் (25).
தேர்தல் அறிவிக்கப்பட தினத்தில் இருந்து ஓட்டுப்பதிவு வரை இருவருக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், இருவருடைய கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒரே மருத்துவமனையில் இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீசார் வடிவேலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.
இதனால் கரூரில் திமுக, அதிமுக இடையே கடும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications