ஒரே நாளில் சவரனுக்கு ரூ 168 உயர்வு!!
சென்னை: தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 168 அதிகரித்துள்ளது.
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக சிறிது அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 168 உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 792 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 168 உயர்ந்து,
ரூ. 15 ஆயிரத்து 960 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 1995 ஆக விற்கிறது. அதாவது கிட்டத்தட்ட ரூ 2000 ஐத் தொட்டுவிட்டது. இதுவரை இல்லாத அதிகபட்ச விலை இதுவே. இந்த விலை உயர்வு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது காரணம் என கூறப்படுகிறது. மேலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ. 62 ஆயிரத்து 625 ஆகவும், ஒரு கிராம் ரூ. 67 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications