மதுரையில் கல்லூரி மாணவி கொலை:தாய்-சகோதரி கவலைக்கிடம்
மதுரை: மதுரையில் நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியதில் பொறியியல் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். அவரது தாய், சகோதரி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கத்துக்கு (51) நாகஜோதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவில் வசித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்பே முத்துராமலிங்கம் லதா என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவருக்கு காயத்திரி (19), சித்திரை செல்வி (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வில்லாபுரம் மாரியப்ப பிள்ளை தெருவில் வசித்து வந்தனர்.
லதா குடும்பத்தினரை முத்துராமலிங்கம் கவனிக்கக் கூடாது என்று முத்துராமலிங்கத்தை நாகஜோதி தடுத்து வந்தார். இதையடுத்து லதா குடும்பத்தை முத்துராமலிங்கம் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இதனால் லதா-முத்துராமலிங்கம் இடையே பிரச்சனை வெடித்தது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு லதா தனது மகள்கள் காயத்திரி, சித்திரை செல்வி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியது.
லதா கதவைத் திறந்தவுடன் அந்தக் கும்பல் உள்ளே புகுந்து தாய் , மகள்களை சரமாரியாக வெட்டியது. இதில் சித்திரை செல்வி அதே இடத்தில் பலியானார். லதா மற்றும் காயத்திரி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சித்திரை செல்வி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். காயத்திரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வீடு புகுந்து வெட்டிய கொலையாளிகள் யார் என்பது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications