'தன் மனைவியையே ஏமாற்றி வேட்பாளரானவர் தங்கபாலு'-ஈவிகேஎஸ்
கரூர்: வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சித் தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி குறுக்கு வழியில் வேட்பாளரானார். இதனால் அவர் மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,தமிழக காங்கிரஸ் தலைவர் என்று கூறிக் கொள்ளும்
தங்கபாலுவுக்கு 19 காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க எந்த அதிகாரம் இல்லை, அது செல்லாது. காரணம் அவர் நீக்கியதில் பெரும்பாலானவர்கள் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள். இவர்களை நீக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தான் அதிகாரம் உண்டு.
மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர்கள். இவர்களை நீக்கும் அதிகாரம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு.
எனவே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தங்கபாலுவுக்கு இல்லை. காந்திய வழியில் போராடும் கட்சி நிர்வாகிகளுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர்.
வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சித் தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார்.
கட்சி விரோதமாக செயல்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், மைலாப்பூரில் குறுக்கு வழியில் வேட்பாளரான தங்கபாலு மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications