இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங்கை கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்டர்நெட்டில் தனது சகோதரியின் ஆபாச படத்தையும் அவர் குறித்து தவறான தகவல்களையும் வெளியிட்ட தங்கை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (26). இவர் சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது அக்காவான சமந்தாவுக்கும் (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந் நிலையில் தனது அக்காவின் படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாச படமாக்கி அதை இன்டர்நெட்டில் ஒரு ஆபாச இணையத் தளத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்டார். மேலும் அவர் குறித்து அதில் மோசமான விவரங்களும் இருந்தன.

இது குறித்து அஞ்சுகிராமம் போலீசில் சமந்தா புகார் செய்தார்.

ஆனால் ஓராண்டாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் மைலாப்பூரில் வசித்து வந்த ஜான்சி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். சொத்து தகராறில் அக்காள் மீதுள்ள கோபத்தில் இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான்சி ராணி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கும் சமந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசிலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+