கூலிப்படையால் ஆபத்து: பாதுகாப்பு கேட்டு பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் மனு
கடலூர்: கூலிப்படையினரால் தனக்கும், தனது சகோதரர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாமக எம்.எல்.ஏ.வும், நெய்வேலி தொகுதி வேட்பாளருமான வேல்முருகன் கலெக்டர் சீதாராமன் மற்றும் எஸ்.பி. அஷ்வின் கோட்னீசிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் நெய்வேலியில் பாமக சார்பில் போட்டியிட்டேன். தேர்தல் நாளன்று சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த 150 பேர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வீச்சருவாள், இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நெய்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர். அங்கு இருந்த பாமக-திமுக கூட்டணி கட்சியினரை மிரட்டியும், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
பின்னர் சமட்டிக்குப்பத்தில் உள்ள 55, 56 எண் வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.அந்த கும்பல் என்னையும், எனது சகோதரரர்கள் திருமால்வளவன், கண்ணன் ஆகியோரையும் கொலை செய்ய சபதம் எடுத்துள்ளது. எனவே அந்த கும்பலை கைது செய்து எனக்கும் எனது சகோதரர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications