சந்திரபாபு நாயுடு 62வது பிறந்தநாள்: ஜெயலலிதா மனதார வாழ்த்து
சென்னை: முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவை ஆற்றிட வேண்டும் என்று வாழ்த்தினார்.
தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் ஜெயலலிதா இந்த வாழ்த்தைத் தெரிவித்தார்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என்.சந்திரபாபு நாயுடுவின் 62வது பிறந்தாளையொட்டி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் அனைத்து நலமும், வளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்து பல வெற்றிகளைப் பெற்று நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றிட வேண்டும் என்று மனதார வாழ்த்தினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications