திருச்சியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு வலைவீச்சு
திருச்சி: திருச்சியில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியை அடுத்த கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியய்யா (எ) பெரியசாமி (31). அவர் மீது கொலை, கள்ளச்சாரயம் என பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் குழுமணியில் கடந்த 17-ம் தேதி கோப்பு கோவிலில் பூச்செரிதல் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள பெரியசாமியின் அத்தை மகன் அன்பழகன் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்தார். அப்போது வழியில் சறுக்கி கீழே விழுந்தார்.
இதனால் அன்பழகனுக்கும் அங்கிருந்த யோகானந்த் (18), மூர்த்தி (25) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பழகன் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வெட்டுப்பட்ட மூர்த்தியின் அண்ணன் பாஸ்கர், அவரது நண்பர் சுந்தர் ஆகியோர் கடந்த 18-ம் தேதி பெரியசாமியை சந்தித்து இது குறித்து பேசியபோது அவர்களுக்கு இயையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அவர்கள் பெரியசாமியை அரிவாளால் வெட்டினர். சம்பவ இடத்திலேயே பெரியசாமி துடிதுடித்து இறந்தார். கொலையாளிகள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பாஸ்கர் அவரது நண்பர் சுந்தர் ஆகியோரை வலை வீசித் தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications